விபத்துக்குள்ளான ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில் ஆகிய இரு ரயில்களிலும் 2296 பேர் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில், ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒரு சரக்கு ரயில் ஆகியவை அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது.
900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் 2296 பேர் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேரும், யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,039 பயணிகளும் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.