இந்தியா

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பாஜகவில் இணைந்தார்..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில அமைச்சருமான நமச்சிவாயம் காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வந்த நிலையில், நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.  

ALSO READ  Mostbet Приложение Установить Приложение Mostbet Мостбет Для Ios И Androi

இதற்கான கடிதத்தை அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கடந்த 25-ஆம் தேதி வழங்கினர்.  புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தது, அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை ராஜினாமா செய்த நமச்சிவாயம் தற்போது அவரது ஆதரவாளர்களுடன் டெல்லியில் உள்ளார். 

காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் நமச்சிவாயம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் தற்போது நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும்டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்தனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடும் பணி இன்று முதல் தொடக்கம் !

News Editor

ஜார்க்கண்ட் புதிய கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன்!

Shanthi

கொரோனா தொற்றால் எனக்கு ஏற்பட்ட நன்மை- மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்… 

naveen santhakumar