லைஃப் ஸ்டைல்

3,6,9 எண்களின் ரகசியம்….. டெஸ்லா இதைப் பயன்படுத்தக் காரணம் என்ன?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

“இயற்பியலின் தந்தை”, “இருபதாம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பாளர்”, என்றெல்லாம் போற்றப்பட்ட ஒரு மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளர், நிகோலா டெஸ்லா. ஏனோ, நாம் மற்ற கண்டுப்பிடிப்பாளர்களைக் கொண்டாடிய அளவு டெஸ்லாவைக் கொண்டாட மறந்துவிட்டோம். இன்று நம் வீடுகளில் பயன்படுத்திவரும் மின் சாதனங்கள் அனைத்திலும் டெஸ்லாவின் பங்கு மிகவும் அதிகம். மின்சாதனங்களை இயக்க பயன்படுத்தப்படும் மாறுதிசை மின்னோட்டத்தைக் கண்டுபிடித்தது இவர் தான்.

எக்ஸ்ரே, செயற்கை கடல் அலைகள், டெஸ்லா சுருள் என இவரது கண்டுபிடிப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.இப்படிப்பட்ட ஓர் கண்டுப்பிடிப்பாளரான நிக்கோலா டெஸ்லா , தன்னுடைய வாழ்வில் எதற்காக இந்த 3,6,9 ஆகிய எண்களை முக்கியமாய் கருதிப்பயன்படுத்தினார்?

வாருங்கள் பார்ப்போம்…

369 எண்களின் ரகசியம் :

இந்த உலகில் ஒரு உயிரானது தன்னுடைய பயணத்தை ஒற்றை செல்லில் இருந்து தான் தொடங்குகிறது. ஒரு செல், இரண்டாகி, பின்பு நான்காகி, பின் எட்டாகி, பதினாறு, முப்பத்திரண்டு என பெருகிக்கொண்டே போகும்.
1,2,4,8,16,32,64…….

ALSO READ  "ஒரே ட்வீட்.....ஒரு லட்சம் கோடி அபேஸ்"; வருத்தத்தில் எலான் மாஸ்க் !

இப்பொழுது இதை சற்று மாற்றி அமைத்து பார்ப்போம்.
1,2,4,8,16,32,64,128,256..
1,2,4,8, (16=1+6=7), (32=3+2=5), (64=6+4=10=1), (128=1+2+8=11=2), (256=2+5+6=13=4)
1,2,4,8,7,5,1,2,4…

இப்படி இந்த எண்களின் கூட்டுத்தொகை பார்த்தால் மீண்டும் மீண்டும் 1, 2, 4, 5, 7, 8 போன்ற எண்களே தோன்றும். இந்த வரிசையில் எங்குமே 3,6, 9 ஆகிய எண்கள் வராது.

காரணம் , இந்த 3,6,9 ஆகிய எண்கள் தான் மற்ற அனைத்து எண்களையும் கட்டுப்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது. சரி. இப்பொழுது 3,6 ஆகிய எண்களை இரட்டிப்பாக்கி பார்ப்போம்.

3,6,12,24,48,96…
இப்பொழுது இதன் கூட்டுத் தொகையை பார்த்தால்,

3,6,(1+2=3),(24=2+4=6), (48=4+8=12=1+2=3)
3,6,3,6,3… மீண்டும் மீண்டும் 3, 6 ஆகிய எண்களே தோன்றும் இதில் எங்குமே ஒன்பது வராது.

ஒன்பது எனும் எண் தான் அனைத்து எண்களையும் கட்டுப்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது.

மேலும் 1,2 ,4 ஆகிய எண்களை 3 எனும் எண் கட்டுப்படுத்துகிறது என்றும், 5,7, 8 ஆகிய எண்களை 6 எனும் எண் கட்டுப்படுத்துகிறது என்றும் , 9 எனும் எண் எதன் கட்டுப்பாட்டின் கீழும் வராது என்றும் சொல்லப்படுகிறது.

ALSO READ  சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி - 1

அது மட்டுமன்றி, 1 முதல் 8 வரை இருக்கும் எண்களை கூட்டினால் வரும் விடையும் 9 ஆக தான் இருக்கும்.

1+2+3+4+5+6+7+8=36=3+6= 9

இதிலிருந்து 3,6 ஆகிய எண்களை நீக்கிவிட்டு கூட்டினாலும் ஒன்பது என்னும் எண்ணே விடையாகக் கிடைக்கும்.

1+2+4+5+7+8=27=2+7=9

இந்த ஒன்பது என்னும் எண் பெரும் ரகசியம் என்று சிலரால் நம்பப்படுகிறது.

இந்த 3,6,9 ஆகிய எண்களுக்கு என்று ஓர் பெரும் அதிர்வலை இருக்கிறது , சக்தி இருக்கிறது.

இந்த மூன்று எண்களுக்கும் டெஸ்லா தனது வாழ்வில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை பயன்படுத்தி இருக்கிறார். இன்றும் பலர் இந்த மூன்று எண்களையும் பயன்படுத்தி ஈர்ப்பு விதியின் மூலம் தனக்குத் தேவையானவற்றை ஈர்த்துக் கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

  • Dr.வைஷ்ணவி.க

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களே !! தினமும் இந்த 5 ஊட்டச்சத்துக்களை அவசியம் எடுத்துக்கோங்க..

naveen santhakumar

ப்ளாக் டீ

Admin

மங்களகரமான முகத்திற்கு மஞ்சள் பேக் :

Shobika