மருத்துவம்

உடல்நலத்தை காக்கும் பூசணிக்காய் விதைகள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல்நலத்தை காக்கும் பூசணிக்காய் விதைகள்

அன்றாடம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று பூசணிக்காய். கொடியில் காய்க்கக்கூடிய இயற்கையில் பழவகையை சார்ந்தது. ஆனால் அமைந்தது என்னவோ காய்கறி வரிசையில் தான். பல நிறங்களில் அமைந்துள்ள பூசணிக்காய் சமையலிலும், திருஷ்டி சுத்தும் போது என பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

இதில் அமைந்துள்ள விதைகளை நாம் அன்றாடம் சாப்பிட்டால் நாம் நம் உடல் நலத்தில் கீழ்க்கண்ட பயன்களை பெறலாம்.

  1. பூசணி விதையில் இயற்கையாகவே மெக்னீசியம் அமைந்துள்ளது. இது எலும்பு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் எலும்புகளுக்கு வலுக்கொடுக்கும்.
  2. நீரிழிவு நோயாளிகள் பூசணி விதைகளை உண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்கோப்பாக வைக்கலாம்.
  3. பூசணி விதைகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. இதன் மூலம் கெட்ட கொழுப்புகள் குறைக்கப்படுவதால் இதயத்திற்கு மிகவும் நல்லது.
ALSO READ  எச்.ஐ.வி யை வென்ற உலகின் 2-வது நபர்..!

4.பூசணியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உணவு செரிமானத்திற்கு உதவுவதோடு, உடலை அழகிற்கும் பயன்படுகிறது.

5.பூசணி விதையில் உள்ள மெக்னீசியம் தூக்கத்தை ஊக்குவிக்கிறது. இது தூக்கமில்லாமல் தவிப்பவர்களுக்கு சிறந்த மருந்தாகும்.

6.பூசணி விதைகளில் கூக்குர்பிடின் (ஒரு வகை அமினோ அமிலங்கள்) உள்ளன. இவை முடிகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் உதவுகின்றன.

ALSO READ  வெற்றிலையின் வியக்கும் பயன்கள் :

இத்தகைய நன்மைகள் நிறைந்த பூசணி விதைகளை பச்சையாகவும், வறுத்தும் சாப்பிடலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாதவிடாயின்போது ஏற்படும் மார்பக வலி….தீர்க்கும் வழிமுறை….!!!

Shobika

மாதுளம் பழமும் அதன் ஒப்பற்ற நோய் எதிர்ப்பு குணங்களும்… 

naveen santhakumar

பிறந்து 30 மணிநேரமே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு.

naveen santhakumar