மருத்துவம்

மாதவிடாயின்போது ஏற்படும் மார்பக வலி….தீர்க்கும் வழிமுறை….!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாதவிடாய் நெருங்கும் நாட்களில் வயிறு, இடுப்பு, தொடைகள் போன்றவை வலிப்பதைப் போலவே பல பெண்களுக்கும் மார்பகங்களில் வலி இருக்கும். மார்பகங்களில் வீக்கம், கனத்த உணர்வு, வலி போன்ற அந்த மாற்றங்களின் பின்னணி, தீர்வுகள், வாழ்க்கை முறை பற்றி பார்க்கலாம்.

Painful Periods: When to See Your Gynecologist - Raleigh-OBGYN

மாதவிலக்கு நெருங்கும்போது மார்பகங்களில் ஏற்படுகிற இந்த அறிகுறிகளுக்கும் ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம்(premenstrual syndrome) பிரச்னைதான் காரணம். மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள்.

இந்த அறிகுறிகள் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்கள் முன் ஆரம்பித்து, மாதவிலக்கின்போது உச்சத்தை அடைந்து பிறகு தானாகவே சரியாகி
விடக்கூடியவை. பயப்படத் தேவையில்லை. அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது.

ALSO READ  முகப்பொலிவிற்கு இதையெல்லாம் பாலோவ் பண்ணுங்க.....

எவை எல்லாம் சாதாரணமானவை?

  • வீக்கம்
  • மென்மையாதல்
  • வலி
  • எரிச்சல்
Heavy and sore boobs: Causes and pain relief

மார்பகங்களின் அடர்த்தியில் மாற்றம் என்ன செய்யலாம்?

  • கொழுப்பு அதிகமான உணவுகளைத் தவிர்த்து குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடவும்.
  • கஃபைன் உள்ள காபி, டீ, கோலா, சாக்லேட் என எல்லாவற்றையும் தவிர்க்கவும்.
  • மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடவும்.
  • மார்பகங்களை உறுத்தாத, சிரமப்படுத்தாத சப்போர்ட் கொடுக்கும்படியான வசதியான உள்ளாடை அணியவும்.
  • உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளவும்.

எவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது?

  • மார்பகங்களிலோ அல்லது அக்குள் பகுதிகளிலோ அசாதாரணமான கட்டி, வீக்கம், வலி போன்றவை தென்பட்டால்.
  • மார்பகங்களிலிருந்து திரவமோ, ரத்தமோ கசிந்தால்.
  • உணவு, உடற்பயிற்சி, உள்ளாடை என மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் பின்பற்றிய பிறகும் ஒருவித அசவுகரியத்தை உணர்ந்தால். தூக்கம் கெட்டுப்போகும் அளவுக்கு அது உங்களைப் பாதித்தால்.
  • மாதவிலக்கு முடிந்தபிறகும் இந்த அறிகுறிகள் தொடர்ந்தால்.
  • மார்பகங்களின் வடிவத்தில் மாற்றங்களை உணர்ந்தால்.
  • மார்பகத்தின் சருமமானது சிவந்துபோவது, அரிப்பது, குழிகள் விழுந்து காணப்படுவது போன்ற மாற்றங்களை சந்தித்தால்.
ALSO READ  கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலிக்கு தீர்வு இதோ....!!!!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மகளிர் மருத்துவரை அணுகிப் பரிசோதனையும் ஆலோசனையும் மேற்கொள்வது பாதுகாப்பானது.
வாழ்வியல் மாற்றங்களும் அவசியம்

What's Causing Your Breast Pain or Tenderness? – Cleveland Clinic
  • மார்பகங்களில் வலியோ, வீக்கமோ இருக்கும் நாட்களில் இரவில் உள்ளாடை அணிவதைத் தவிர்க்கவும்.
  • மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் இ மற்றும் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.
  • நடைப்பயிற்சி, இரவில் வெதுவெதுப்பான நீரில் குளியல் போன்றவையும் இதமளிக்கும்.

சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள் :

  • வேர்க்கடலை மற்றும் ஹேசில் நட்ஸ்
  • பசலைக்கீரை
  • ஆலிவ்
  • சோளம்
  • கேரட்
  • வாழைப்பழம்
  • பழுப்பரிசி

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா…?

Admin

வாழைப்பழத் தோலில் இவ்வளவு நன்மைகளா!!!!!இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே…..

naveen santhakumar

ரத்தசோகையை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்

Admin