தமிழகம் மருத்துவம்

செம்ம ஹேப்பி நியூஸ்… இனி இவர்களுக்கும் இலவச மருத்துவ காப்பீடு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கான ஆண்டு வருமான வரம்பு 72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் உடையவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் முதல்வர் கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாடு அரசால் 23.07.2009 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியின் குடும்பத்திற்கு ரூ.1 இலட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற காப்பீடு செய்யப்பட்டது.

இக்காப்பீட்டுத் திட்டத்தின் தொடர்ச்சியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 11.01.2012 முதல் விரிவாக்கம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அரசாணை (நிலை) எண்:169, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, நாள் 11.07.2011-ல் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு தற்போது வரை ஆண்டு வருமான வரம்பில் எந்தவித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

ALSO READ  "ஒன்றிய அரசு" தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா” என்ற திட்டத்தினை ஒருங்கிணைத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கும் காப்பீட்டுத் தொகை ரூபாய் 5.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்ள மற்றும் கருத்துருவின் அடிப்படையில் முதவனமசீசரின் விரிவான மருத்துவக் காப்பிட்டுத் திட்டத்தில் தற்போது வரையறுக்கப்பட்டுள்ள குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000/-ஆக உள்ளதை ரூ.1.20000/- ஆக உயர்த்தலாம் என தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் முக்கிய ஆலோசனை…!

மேற்காணும் சூழ்நிலையில், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநதி கருத்துருவினை அரசு நன்கு பரிசீலனை செய்து 11.01.2022 முதல் புதி நீட்டிக்கப்படவுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத் பயனாளியாவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பை ரூ.72,000/-லிரு ரூ.1.20000/- ஆக உயர்த்தலாம் என ஆணையிடுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம்…!

naveen santhakumar

சிறுநீருக்கு பதிலாக ஆல்கஹாலை வெளியேற்றும் பெண்- மருத்துவர்கள் அதிர்ச்சி…

naveen santhakumar

அத்தியாவசிய காய்கறி விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

naveen santhakumar