தமிழகம்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாட்டின் அநேக இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் ரெட்  அலர்ட்! | Mumbai Monsoon: Heavy Rains Predicted In City, India  Meteorological Department Issues Red Alert ...

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி ,ஈரோடு ,தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை ,சேலம் மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ALSO READ  அதிமுக தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை; முடிவுக்கு வருமா  இழுபறி...!

ஈரோடு, தேனி மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதர மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. தமிழ்நாடு, புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 30-ம் தேதி வரை கன மழை பெய்ய வாய்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ALSO READ  இனி துப்பட்டா இல்லாமல் கோவிலில் நுழைய முடியாது- எந்த கோவில் தெரியுமா?

சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விழுப்புரம் அனந்தபுரத்தில் 10 செ.மீ., கள்ளக்குறிச்சியின் அரியலூரில் 8 செ.மீ., முங்கில்துறைப்பட்டில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா நோயாளிகளின் உணவு தேவைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம்; பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் !

News Editor

முதல் டோஸ் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி நீலகிரி மாவட்டம் சாதனை..!!

Admin

சென்னையில் புயல்,மழை பாதிப்பு சேதங்களை ஆய்வு செய்கிறது மத்திய குழு :

naveen santhakumar