இந்தியா மருத்துவம்

சீன ரேப்பிட் டெஸ்ட் கிட்கள் சொதப்பல்… அதில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம்: ஐ.சி.எம்.ஆர்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெய்பூர்:-

கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள உதவும் ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகளால் (Rapid Test Kits), 2 நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (IMCR) தெரிவித்துள்ளது. 

பொதுவாக RT-PCR கிட்டுகள் கொரோனாவுக்கான முதன்மை பரிசோதனையில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகிறது.

விரைவாக பரிசோதிக்க உதவும் ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும்போது, முடிவுகள் தவறாக வருவதாக ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் புகார் தெரிவித்துள்ளன. இதேபோல மேற்கு வங்க மாநிலம் உன் இதன் முடிவுகளில் கோளாறு ஏற்படுவதாக புகார் தெரிவித்து இருந்தது.

5.4 சதவீத அளவுக்கு மட்டுமே ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகளின் முடிவுகள் துல்லியாக உள்ளதென ராஜஸ்தான் அரசு புகார் கூறியுள்ளது. ஏற்கனவே பல ஆயிரம்பேருக்கு ரேப்பிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களில் ஏராளமானோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. இந்த நிலையில் சுமார் 6 சதவீதம் மட்டுமே அவை நம்பகத்தன்மை வாய்ந்தவை என சில மாநிலங்கள் புகார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ALSO READ  டெல்லி ஐஐடி உருவாக்கிய கொரோனா PCR கருவிக்கு -ICMR அனுமதி....

வழக்கமாக கொரோனா பாதிப்பை P.C.R கருவி மூலமாக மருத்துவர்கள் கண்டறிந்து வருகின்றனர். இதில் முடிவுகள் தெரிய சில நாட்கள் ஆகுவதுடன், பரிசோதனைக்கான செலவுகளும் அதிகமாக இருந்தன.

இதனை தவிர்ப்பதற்காக சீனாவிடம் இருந்து 24 ஆயிரம் ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகளை  (RT-PCR) வரவழைத்து தமிழக அரசு பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் இந்த கிட்டுகளுக்கு நம்பகத்தன்மை குறைவாக உள்ளதென புகார் எழுந்திருக்கிறது.

ALSO READ  1xbet Casino México Bono De Bienvenida $40, 000 Mx

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்  தொற்று நோய் பரவல் துறைத்தலைவர் Dr. கங்காகேட்கர் (Gangakhedkar) கூறுகையில்:-

இந்த ரேப்பிட் டெஸ்ட் கிட்களில் பரிசோதனை செய்யும்போது 6 முதல் 71% வரை அதன் துல்லியத் தன்மையில் வேறுபாடு  ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin Up Casino Online Az Azerbaijan Пин Ап Казино Pinup Rəsmi Saytı Pin Ap Bet 30

Shobika

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 102 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று…

naveen santhakumar

1xBet 1хБет скачать на Андроид Приложение 1xbet Android apk бесплатн

Shobika