உலகம்

கொரோனா ஊரடங்கு உத்தரவு நேரத்தில் புதிதாக உருவாகியிருக்கும் பில்லோ சேலஞ்ச்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸை சமாளிக்க நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் புதிதாக ஒரு சேலஞ்ச் வைரலாகி வருகிறது.  அதுதான் பில்லோ சேலஞ்ச்.

காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்பதுபோல ஆடைகள் முழுவதும் கலைந்து பஞ்சுத் தலையணை மட்டும் முன்னால் கட்டிக் கொண்டு நிற்பது தான் இந்த பில்லோ சேலஞ்ச்.

உடலில் உடை எதுவும் அணியாமல் வெறும் தலையணையை மட்டுமே கட்டிக் கொள்ளும்  இந்த அதி அற்புதமான சேலஞ்ச் வைரலாகி வருகிறது. அதுதான் பில்லோ சேலஞ்ச். இந்த பில்லோ சேலஞ்ச் புகைப்படங்களை இணையதள வாசிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இது ஒருவித ஃபேஷன் சேலஞ்ச் போன்றே ஆன்லைனில் வலம் வருகிறது.

நடிகைகளான சுரபி மற்றும் பாயல் ராஜ்புத் ஆகியோரும் இந்தப் வீரமான பில்லோ சேலஞ்சை ஏற்றுக்கொண்டு தங்கள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Surabhi.
Payal Rajput.

இதற்கு முன்னர் வந்த வேறு சில சேலஞ்ச்கள் குறித்து பார்ப்போம்:-

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், தனது தலையில் தானே வாரிக் கொட்டிக் கொள்வது தான் இந்த சேலஞ்ச். இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்பது உடையுடன் அப்படியே ஐஸ்கட்டி போட்ட தண்ணீரை வாலியுடன் தலையில் ஊற்றிக் கொள்வது தான் இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச்.

 ப்ளூவேல் சேலஞ்ச்:-

நீல திமிங்கலம் சவால் உலகளவில் பெரும் சர்ச்சைக்குள்ளான ஒரு விளையாட்டு இது பல்வேறு கட்டளைகள் இதில் விதிக்கப்படும் கடைசியாக அவர்கள் தரும் அனைத்து வசதிகளையும் முடித்தபிறகு கையில் ப்ளூவேல் ஒன்றை வரைந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும் இதுதான் போட்டியின் முடிவு. ரஷ்யாவைச் சேர்ந்த நபர் ஒருவர் உருவாக்கியதாக கூறப்படும் இந்த சேலஞ்சை பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட கடைசியாக தற்பொழுது பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதாக நம்பப்படுகிறது.

ALSO READ  பாகிஸ்தான் பிரதமர் அடுத்த மாதம் இலங்கை பயணம் :

மோமோ சேலஞ்ச்:-

வாட்ஸஅப்பிற்கு ஏதோ முகம் தெரியாத நபர்கள் புதுப்புது கட்டளையிட்டு மிரட்டியுள்ளனர். அதை ஏற்க வேண்டும் மறுக்கும் போது மனிதன்-விலங்கு-ஏலியன் என்ற கொடூர கலவை உருவம் நம்மை அச்சுறுத்தும். இறுதியில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவோம் என்று மிரட்டி தற்கொலை எண்ணத்தைத் தூண்டும். அதுவே மோமோ சேலஞ்ச்.

கிகி சேலஞ்ச்:-

ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாடுவது, பைக்குகளில் சாகசம் செய்வது என விநோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டனர். இந்த ‘கிகி சேலஞ்ச்’ இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி, இளைஞர்கள், பெண்கள் என சாலையில் இந்த சாகசத்தில் ஈடுபடத் தொடங்கினர். ஒரு சிலரின் இந்தச் செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. கிகி சேலஞ்ச் என்ற பெயரில் பொது இடத்தில் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பல்வேறு மாநில காவல்துறையினர் எச்சரித்திருந்தனர். அதன்பிறகு அமைதியானது கிகி சேலன்ஜ்.

காக்ரோச் சேலஞ்ச்:-

இது ஒரு உவ்வே சேலஞ்ச்,  முகத்தில் கரப்பான் பூச்சியை ஓடவிட்டு, சில நொடிகள் அப்படியே வைத்திருந்து, அதைப் போட்டோ எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. தைரியமானவர்கள் மட்டுமல்ல, கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே பதறியடித்து ஓடும் பயந்தவர்களுமேகூட இந்த ‘காக்ரோச் சேலஞ்சை செய்தனர்.

ALSO READ  சீனாவில் மீண்டும் நடனமாடும் கொரோனா:

ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்:-

அதாவது தமிழில் மண்டை ஓடு உடைக்கும் சவால் என்று அர்த்தம். ஒருவரை நடுவில் நிறுத்தி அவரை குதிக்க வைப்பார்கள். அவர் குதிக்கும் நேரத்தில் அதாவது அந்த இரண்டு கால்களும் மேற்பரப்பில் இருக்கும் போது காலை தட்டிவிடுகிறார்கள். அவர் பின் தலை கீழே விழும் வகையில் இந்த சேலஞ்ச் உள்ளது. அடடா என்ன ஒரு அற்புதமான சேலஞ்ச் இது.

சால்ட் சேலஞ்ச்:-

இந்த சவாலில் பங்கேற்பவர்கள் ஒரு உப்பு டப்பாவை அப்படியே எடுத்து வாயில் கவிழ்த்து கொள்கின்றனர். டப்பாவில் உள்ள உப்பு முழுவதும் தொண்டைக்குள் செல்கிறது. அதன்பின் உப்பின் கரிப்பு தங்க முடியாமல் வாயில் இருந்த உப்பை துப்புகிறார்கள். இந்த சவாலில் வெற்றி பெறுவதற்கு உப்பு முழுவதையும் விழுங்க வேண்டும் என்ற தெரிவிக்கப்பட்டாலும் வெற்றி பெற முழுமையாக என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

வீட்டுக்குள்ளேயே சும்மாக என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் காரணத்தால் தான் இதுபோன்ற சவால்கள் மூளையில் உதிக்கிறது போலும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :

Shobika

ஓமிக்ரான் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது

News Editor

ஊழியர்களுக்கு ரூ.35 லட்சம் போனஸ் கொடுத்த நிறுவனம்

Admin