அரசியல்

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2020-21ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14ம் தேதி தொடங்கும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. மேலும் அன்றைய தினமே தமிழக அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய அதிமுக அரசின் முழு நேர பட்ஜெட் என்பதால் மக்களை கவரும் வகையில் நிறைய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  நடிகர் விஜய் முதல்வருடன் திடீர் சந்திப்பு..!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, குடிமராமத்து பணிகளுக்கான கூடுதல் நிதி, புதிய மாவட்டங்கள், தாலுக்காக்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் பட்ஜெட் தாக்கலின் போது டி.என்.பி.எஸ்.சி முறைகேடு, குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தி.மு.கவை விமர்சித்து அறிக்கை: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

தமிழக ஊர்தி இடம்பெறாதது ஏன்?… முதல்வருக்கு ராஜ்நாத் சிங் கடிதம்!

naveen santhakumar

‘ஆக்சிஜன் தட்டுப்பாடு’ பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் !

News Editor