அரசியல் இந்தியா

தலிபானுக்கு ஆதரவு -எம்.பி., மீது தேசதுரோக வழக்கு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சம்பல்:

உத்தர பிரதேசத்தில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசிய சமாஜ்வாதி எம்.பி., மீது, தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்திர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது.

ஆப்கனை தலிபான் ஆக்கிரமித்ததை இந்திய சுதந்திர போராட்டத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளதாக சமாஜ்வாதி எம்.பி. ஷபிக்யுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து ஷபிக்யுர் ரஹ்மான் மீது, தேச துரோக சட்டத்தின் கீழ் உத்திர பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ALSO READ  460 குழந்தைகள் பரிதாபமாக பலி.. யுனிசெப் வெளியிட்ட பகீர் தகவல்!

மக்களிடையே மதம், மொழி, இனம், பிறப்பு ஆகியவை சார்ந்த வெறுப்புணர்வை துாண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஷபிக்யுர் ரஹ்மான் கூறியதை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்ட சமாஜ்வாதி பிரமுகர்கள் மீதும், தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா மருந்து அனுப்ப வேண்டும்- ட்ரம்ப் வேண்டுகோள்....

இதற்கிடையே ஷபிக்யுர் ரஹ்மான் கூறியுள்ளதாவது:

Afghanistan: The Taliban's victory will test India, and peace in South Asia  - BBC News

“ஆப்கனை, ரஷ்யா அல்லது அமெரிக்கா ஆளக் கூடாது. மண்ணின் மைந்தர்களான தலிபான்களே ஆள வேண்டும் என அந்நாட்டு மக்கள் கருதுவதாகத்தான் கூறினேன்.என் கருத்து தவறாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்து, நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்.”என்று அவர் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லாலு பிரசாத் யாதவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது:

naveen santhakumar

Aksai Chin அல்ல; Aksai India; அக்சய்சின்னை மீட்க வேண்டிய நேரம் இது- எம்.பி. நம்க்யால்… 

naveen santhakumar

ஆன்லைன் ரம்மி: ரம்மி நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..

Shanthi