இந்தியா

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா மருந்து அனுப்ப வேண்டும்- ட்ரம்ப் வேண்டுகோள்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இந்தியா ஹைட்ராக்ஸிக்லோரோக்குயின் (Hydroxycholoroquine) மருந்தை பெருமளவில் வழங்கவேண்டி என்று கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளது, உயிரினங்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது.

இந்நிலையில் நேற்று இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸிக்லோரோக்குயின் மருந்து 

பெருமளவில் தேவைப்படுவதால் அதனை இந்தியா உடனே அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ  பொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் - நிதியமைச்சர் விளக்கம் …!

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக  இயக்குனரகம் (Directorate General of Foreign Trade) கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு ஹைட்ராக்ஸிக்லோரோக்குயின் ஏற்றுமதி செய்வதை தடை செய்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளது.

ALSO READ  அயோத்தியில் நாளை தீபோற்சவம்!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் மலேரியாவிற்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்ஸிக்லோரோக்குயின் மருந்து நல்ல பலன் அளித்துவருவதாக கூறப்படுகிறது. 

எனவே அமெரிக்காவின் பெடரல் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் (Federal Drug Administration) ஹைட்ராக்ஸிக்லோரோக்குயின் மருந்துடன் வேறு சில மருந்துகளையும் சேர்த்து கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அளிப்பதற்கு உடனடி அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.

இந்த ஹைட்ராக்ஸிக்லோராக்குயின் இந்தியாவில் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மழை, வெள்ளம் – மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம்: முதல்வர்

naveen santhakumar

இஸ்ரோ அனுப்பும் விண்வெளி வீரர்களுக்கு பிரியாணி உள்பட 30 வகை உணவுகள்

Admin

பயணத்தை விரும்புகிறவர்கள் வடகிழக்கு இந்தியாவில் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்

Admin