அரசியல் தமிழகம்

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி சட்டப்பேரவை வாயில் அமர்ந்து தமிமுன் அன்சாரி தர்ணா……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

குடியுரிமைச் சட்டம் (CAA), NRC, NRP ஆகியவற்றிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து மனிதநேய ஜனாநாயகக் கட்சித்தலைவர் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை வாயில் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இந்த கூட்டதொடரிலும் மானியக்கோரிக்கை மீதான் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து விவாதம் நடத்தக்கோரியும் அரசு ஒப்புக்கொள்ளவில்லை.

ALSO READ  டெல்லியில் போராட்டக் களத்தில் குவிந்த ஆணுறைகள்.. உண்மையா இல்ல வதந்தியா ?

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்தனர். அது ஏற்கப்படாததை கண்டித்து திமுக வெளிநடப்புச் செய்தது.

இதையடுத்து மனிதநேய ஜனநாயக கட்சித்தலைவர் தமிமுன் அன்சாரி வெளிநடப்புச் செய்தப்பின் சட்டப்பேரவைக்கு வெளியே கையில் கோரிக்கை பதாகை ஏந்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ALSO READ  மருத்துவமனையிலிருந்து மாயமான சிறுமி..

அவரை எழுந்து போகும்படி காவலர்கள் கூறினர் ஆனால் அதை அவர் ஏற்க மறுத்தார்.

சிறிது நேரம் கழித்து காங்கிரஸ் MLA விஜயதரணியும் அவருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததை அடுத்து அவர் கிளம்பிச்சென்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா நிதியாக 1 கோடி ரூபாய் அளித்த அதிமுக !

News Editor

தஞ்சை பெரிய கோயில் கலசம்..தங்க முலாம் பூச வீட்டையே அடமானம் வைத்த தமிழர்

naveen santhakumar

தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் : திமுக வெற்றி முகம்

News Editor