அரசியல்

அம்மா உணவகம் மூடப்படுகிறதா?… ஸ்டாலின் அதிரடி!

MK Stalin
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் தனக்கு ஒருபோதும் கிடையாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார்.

அம்மா மினி கிளினிக்குகளை தொடந்து அம்மா உணவகங்களை மூடும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினார். இதற்கு பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மா மினி கிளினிக் என பெயர் மட்டும் தான் இருக்கிறது, ஆனால் கிளினிக் இல்லை இல்லாத ஒன்றை எப்படி இந்த அரசால் மூடமுடியும் என பதிலடி கொடுத்தார்.

தொடந்து பேசிய அவர், அவை முன்னவரான துரைமுருகன் கூட கலைஞர் பெயரிலான திட்டங்கள் மாற்றப்பட்ட ஆதங்கத்தில் ஒரு உணவகத்தை மூடினால் என்ன தவறு என கேள்வி எழுப்பினார். ஆனால் நான் ஒருபோதும் அவ்வாறு நினைக்கவில்லை. எந்த அம்மா உணவகமும் மூடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். அதனால் தான் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என அறிவித்தேன். அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என்பதை எதிர்க்கட்சித் தலைவருக்கு உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.


Share
ALSO READ  அனைத்து காவல் நிலையங்களிலும் கூடுதல் பெண் காவலர்கள் நியமிக்க ஒன்றிய அரசு உத்தரவு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரச குடும்பத்தின் கௌரவத்தை இழிவுபடுத்திவிட்டாள் என் மகள் : மேகனின் தந்தை குற்றச்சாட்டு

Admin

கடம்பூர் ராஜுவை எதிர்த்து தினகரன் போட்டி; இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக !

News Editor

ஒமிக்ரான் அச்சம் கொஞ்சமும் இல்ல… திமுக அரசை சாடிய ஓபிஎஸ்!

naveen santhakumar