விளையாட்டு

3 ஆண்டுகளுக்கு பின் கோப்பை வென்ற செரீனா வில்லியம்ஸ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்லாந்து கிளாசிக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரர்களின் முக்கியமானவர் செரீனா வில்லியம்ஸ். அமெரிக்காவை சேர்ந்த செரீனா கடைசியாக 2017ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பின் கர்ப்பமடைந்ததால் டென்னிஸில் இருந்து விலகியிருந்த அவர் குழந்தை பெற்ற பின் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்பினார்.

கடுமையான பயிற்சிகளுக்கு பிறகு பல போட்டிகளில் அசத்திய செரீனா சில போட்டி தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாகினார்.ஆனால் அவர் கோப்பையை வெல்லவில்லை.

ALSO READ  ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் போட்டிக்கு பயிற்சியாளராகும் சச்சின்

ஆனால் அவரின் கோப்பை வெல்லும் கனவு 3 ஆண்டுகள் கழித்து நிறைவேறியுள்ளது.

ஆக்லாந்து கிளாசிக் தொடரில் பங்கேற்ற செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலாவுடன் மோதினார். 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை செரீனா தட்டிச்சென்றார். அவர் தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை ஆஸ்திரேலியா காட்டுத்தீ விபத்திற்கு நிவாரணமாக வழங்கியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடுவரின் ஷூவை தொட்டதால் ஜோகோவிச்க்கு 20000 அமெரிக்க டாலர் அபராதம்

Admin

டி-20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு -அணியின் ஆலோசகராக தோனி..!

Admin

கழிவறையில் தோனியின் கானா(பாடல்) கச்சேரி…!!!!

naveen santhakumar