விளையாட்டு

பெண்கள் உலகக்கோப்பை இன்று தொடக்கம் … சவாலில் இந்திய மகளிர் அணி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2020ம் ஆண்டுக்கான 20 ஓவர் பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் இன்று தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த தொடரில் அணிகள் பங்கேற்கின்றன. ‘ஏ’பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், தாய்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.இதன் இறுதிப்போட்டி மார்ச்-8ம் தேதி மகளிர் தினத்தன்று நடைபெற உள்ளது.

ALSO READ  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்

இதில் சிட்னியில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேசமயம் இந்திய அணியும் சம பலத்துடன் களமிறங்க உள்ளது.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டிக்கு இரு அணி வீராங்கனைகள் தயாராக உள்ளனர். இதுவரை 22 டி20 போட்டிகளில் மோதியுள்ள இரு அணிகளும் தலா 10 வெற்றி, 10 தோல்வி பெற்றுள்ளது. 2 போட்டிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உயிருக்கு போராடும் நியூசிலாந்து வீரர் கிறிஸ் கெயின்ஸ் :

Shobika

நியூசிலாந்து அணியை பழிதீர்த்த இந்திய அணி

Admin

முதல் ஒருநாள் போட்டி…அசத்திய வெஸ்ட் இண்டீஸ்…சொதப்பிய இந்தியா

Admin