விளையாட்டு

முதல் நாளில் தடுமாறிய இந்தியா… 2வது நாளில் மீளுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது.

வெல்லிங்டனில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் நியூசிலாந்து அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் ரன் குவிக்க திணறினர். பிரித்வி ஷா 16 ரன்களிலும், அடுத்த களமிறங்கிய புஜாரா 11 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 2 ரன்களிலும் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

ALSO READ  விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகை மியா கலிஃபா ஆதரவு !

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 29 ரன்களிலும், விகாரி 7 ரன்களிலும் வெளியேற இந்திய அணி தேநீர் இடைவேளையில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. ரகானே 38 ரன்களிலும், ரிஷப் பண்ட் 10 ரன்களிலும் களத்தில் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

முதல் நாளில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்திய அணி இரண்டாவது நாளில் நாளிலாவது மீளுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரு வருடம் தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள்….

naveen santhakumar

ரபாடா டெஸ்ட் போட்டியில் விளையாட தடை

Admin

டி20 உலகக்கோப்பை – ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ..!

naveen santhakumar