விளையாட்டு

ரபாடா டெஸ்ட் போட்டியில் விளையாட தடை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எதிரணி வீரர்கள் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி பேட் செய்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை ரபாடா எடுத்தார். அதனை கொண்டாடும் வகையில் ஜோ ரூட் அருகில் சென்று ஆக்ரோஷமாக கத்தினார்.

ALSO READ  நியூசிலாந்தை சம்பவம் செய்ய காத்திருக்கும் இந்திய அணி

இதனால் எதிர் அணி வீரரை கோபமடைய செய்தல் மற்றும் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடந்து கொண்டதாக அவரது ஊதியத்திலிருந்து 15 சதவீதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் ஐசிசி சார்பில் அபராதமும் விதிக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளில் ரபாடா 4 தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றதால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து இடையேயான 4 வது டெஸ்ட் போட்டியில் ரபாடா விளையாட மாட்டார்.இதனிடையே ரபாடாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு சிறை!

Shanthi

ஐபிஎல் ஏலம் : கோடிகளில் எடுக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்

Admin

அதிகரிக்கும் கொரோனா; நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் ரத்து ! 

News Editor