தமிழகம்

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல் தகவலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 முதல் 12 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனிடையே தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.

ALSO READ  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம் ஆவணப்படம் இணையதளத்தில் வெளியீடு
பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு தமிழக அரசு அறிவிப்பு...! | தமிழகத்தில் பள்ளிகள்  திறப்பு ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழக அரசுஅறிவித்துள்ளது ...

இந்நிலையில், இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி திறப்பு தொடர்பாக கூறினார்,

தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து 15ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.

அந்த அறிக்கையில், பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் வருகை, தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னரே 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சசிகலாவிற்கு திடீர் மூச்சுத்திணறல்; மருத்துவமனையில் அனுமதி !

News Editor

விஜயகாந்துக்கு 3 உறுப்புகள் அகற்றம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Shanthi

திரைப்படமாகும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு… யார் இயக்குநர் தெரியுமா?

naveen santhakumar