தமிழகம்

பூமிக்கடியில் புதைந்த வரலாறு… 6ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

சிவகங்கை மாவட்டத்த்திலுள்ள கீழடியில் கடந்த2015ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வில் 2000ம் ஆண்டுகள் பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2018ல் நடந்த 4 மற்றும் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் உறைகிணறு, செப்புகாசுகள், அரசு முத்திரை உள்ளிட்ட பல பொருட்கள் கிடைத்தன.

கடைசியாக நடந்த 5ம் கட்ட அகழாய்வு பணிகளை பல்லாயிரக்கணக்கானோர் வரை நேரில் வந்து பார்வையிட அதன் நாகரீகம் எட்டுத்திக்கும் பரவியது.

ALSO READ  விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்..!

இதனைத்தொடர்ந்து கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு மத்திய அரசு அனுமதியளிக்க, தமிழக அரசு ரூ.32 கோடி நிதி ஒதுக்கியது.

இதன் பணிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். கீழடிக்கு அருகேயுள்ள கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய இடங்களிலும் அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை : முதல்வர் உத்தரவு  

News Editor

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் வைத்தே பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி :

naveen santhakumar

சென்னையில் ஒருவருக்கு புது வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  

News Editor