தமிழகம்

தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்; தற்காலிக குடில் அமைத்த அதிமுக எம்.எல்.ஏ !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா பரிசோதனைக்காகவும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறவும் வந்து செல்கின்றனர்.

தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் காலை 10 மணிக்கு மேல்  அனைத்து மளிகை கடைகளும் மூடப்படுகின்றன. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ஜெயராமனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனையடுத்து இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்ற கே.ஆர்.ஜெயராமன் மருத்துவமனை வளாகம் முன்பு தற்காலிக குடில் அமைத்து, பொதுமக்களுக்கு முதற்கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கினார். மேலும் இது ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


Share
ALSO READ  அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு...!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜூலை 18- தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு: ஸ்டாலின் அறிவிப்பு

naveen santhakumar

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

News Editor

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தை…கதறியழும் மகள்… கண்ணீரை வரவழைக்கும் காட்சி….

naveen santhakumar