தமிழகம்

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் வழக்கு…உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாநில பிரஸ் கவுன்சில் அமைக்க சட்டவிதிகள் உள்ளதா என இந்திய பிரஸ் கவுன்சில் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல் தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது சேகர்ராம் போலி பத்திரிக்கையாளர் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய  தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த  வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிக்கையாளர் சங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமாக மட்டுமே பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டுமே தவிர, நேரடியாக வழங்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

ALSO READ  சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு… 

இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க விதிகள் உள்ளனவா என்றும், மத்திய அரசு சட்டப்படி இந்திய பிரஸ் கவுன்சிலுக்கே அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில பிரஸ் கவுன்சில்கள் அமைக்க சட்டங்கள் உள்ளனவா என தெரிவிக்கும்படி, இந்திய பிரஸ் கவுன்சில் தரப்பு வழக்கறிஞருக்கும், மனுதாரர் மற்றும் பிற வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தினர்.

ALSO READ  கோவில் நிலங்களுக்கு பட்டா கிடையாது - அமைச்சர் சேகர்பாபு …!

சட்டம் இல்லாமல் கவுன்சில் அமைக்க முடியாது என்பதால், உத்தரவை மறு ஆய்வு செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கும்பகோணம் இன்ஜினியரின் வியக்கவைக்கும் வீடு…அப்படி அந்த வீட்டில் என்னதான் இருக்கு??????

naveen santhakumar

பெண்களுக்கு புதுமையை ஏற்படுத்தி கொடுத்த புதுக்கோட்டை….

Shobika

நாளை 1 மணியிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம் :

naveen santhakumar