தமிழகம்

13 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவங்குகிறார்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் கொரோனா நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக மேலும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மக்களின் சிரமங்களை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளின் மூலம் 13 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கோதுமை, ரவை, சர்க்கரை, உப்பு, புளி, மஞ்சள் தூள், கடுகு, பருப்பு, சீரகம், குளியல் சோப், சலவை சோப் உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

ALSO READ  மும்பையில் இருந்து சென்னை வந்த கொரோனா தடுப்பூசி !

இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 13 வகையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டது. நிவாரணப் பொருட்களை பெற பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது, 13 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தலைமைச் செயலகத்தில் வைத்து தொடங்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்களை தாக்க முயன்ற குண்டர்கள்:

naveen santhakumar

இ-பதிவில் குழப்பம்; புதிய மாற்றம் செய்த தமிழக அரசு !

News Editor

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் MLA காலமானார்:

naveen santhakumar