தமிழகம்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பிளாஸ்டிக் குவிந்து , கடல் மாசு அதிகரித்து வருவதால் மீனவர்கள் கவலை..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில்
தினமும் 200 டன் மீன் விற்பனைக்கு வருகிறது . காசிமேடு மீன்பிடி துறை முகத்தின் அருகே , விசைப்படகு கட்டும் தளம் உள்ளது . இந்த தளத்தைச் சுற்றி உடைந்த படகுகள் , பிளாஸ்டிக் , மரத்துண் டுகள் உள்ளிட்ட கழிவுகள் மலை போல குவிக்கப்பட்டுள்ளன .

அத்துடன் பராமரிப்பின்றி மோசமான நிலையில் இப்பகுதி உள்ளதால் , கடும் துர்நாற்றம் வீசுகிறது . காசிமேடு கடல் பகுதியிலும் குப்பை , பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக மிதக்கின்றன .

இவ்வாறு , தொடர்ந்து கடலில் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பையும் அதிகரித்து வருவதால் , மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர் .

ALSO READ  3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

இது குறித்து மீனவர்கள் கூறியது : காசிமேடு கடற்கரை செல்லும் வழியெங்கும் குப்பைக் குவியலும் பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்துள்ளன . கடலிலும் , கழிவுப் பொருட்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் உள்ளன .

இதனால் , மீன் பிடிக்கும் போது விசைப்படகுகள் கவிழும் நிலை ஏற்படுகிறது .

ALSO READ  ரேஷன் அரிசி புகார்...! இதோ வந்துட்டேன் என பைக்கில் சென்று "முதல்வன்" பட பாணியில் நடவடிக்கை செல்லூர் ராஜூ..

மீன் பிடிக்கும் வலைகளில் சில நேரங்களில் , பிளாஸ்டிக் மற்றும் குப்பை மாட்டிக் கொள்ளும் .

கடந்த ஒரு வாரமாக குப்பை மற்றும் கழி வுப் பொருட்களின் அளவு அதிக ரித்துள்ளது . கடல் மாசு , சுற்றுப் புறசூழலுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால் .

கடலில் உள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்ற , அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கூறினர் .

சி.திவ்யதர்ஷினி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல்வன் பட பாணியில் உடனே கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:

naveen santhakumar

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

Shanthi

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்… 

naveen santhakumar