இந்தியா சுற்றுலா தமிழகம்

3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில், சுற்றுச்சூழலை பாதிக்கின்ற வகையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளதால் இதனை தவிர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், அதனை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சென்னையில் கடந்த 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 8 ஆயிரத்து 777 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளபட்ட ஆய்வில் 2 ஆயிரத்து 823 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் இருந்து 2 ஆயிரத்து 951 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அபராதமாக ரூ.10 லட்சத்து 10 ஆயிரத்து 100 விதிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  லடாக் எல்லையில் களமிறக்கப்படும் சிறப்பு வீரர்கள்:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘ஆன்லைன்’ வாயிலாக திருமணம் – உயர் நீதிமன்றம் அனுமதி

News Editor

நீட் தேர்வு ரத்து: அமைச்சர் உறுதி..!

naveen santhakumar

ஜிகா வைரஸ் என்றால் என்ன? எப்படி பரவுகிறது ?

naveen santhakumar