தமிழகம்

கும்பகோணத்திலிருந்து புதுச்சேரி மருத்துவமனைக்கு சைக்கிளிலேயே மனைவியை அழைத்து சென்ற கணவர்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புற்றுநோயால் அவதிப்பட்ட தன் மனைவியை சைக்கிளில் அமரவைத்துக் கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவு பயணித்து புதுச்சேரி ஜிப்மருக்கு அழைத்துச் சென்ற கூலித் தொழிலாளி, தன் மனைவியின் வேதனையை விட தூரம் பெரிதாகத் தெரியவில்லை என்கிறார்.

கும்பகோணத்தை அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன்(60). கூலித் தொழிலாளியான இவரது 2-வதுமனைவி மஞ்சுளா(39). இவர்களுக்கு விஷ்ணு(12) என்ற மனவளர்ச்சி குன்றிய மகன் உள்ளார், அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

புதுச்சேரியில் உள்ளது ஜிப்மர் மருத்துவமனை. இங்கு கேன்சருக்கான சிகிச்சை அளிக்கப்படுவதால் தமிழகத்தின் பலமாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் வயதானவர் ஒருவர் தனது மனைவியை சைக்கிளின் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு ஜிப்மர் மருத்துவமனைக்குள் வந்தார். அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்தவர்கள் எங்கே செல்கின்றீர்கள் என்று கேட்டனர். அதற்கு கேன்சர் சிகிச்சை பிரிவுக்கு என்று கூறியுள்ளனர். அவர்களும் அதற்கான இடத்தை காண்பித்து அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த கட்டடத்தின் வாயிலில் சென்று சைக்கிளோடு களைப்புடன் அமர்ந்தார்கள் அந்த தம்பதிகள்.

ALSO READ  புதிய மாநகராட்சி அமைப்பதற்கான அரசாணை வெளியீடு

இதைப் பார்த்த பாதுகாவலர்கள் அந்த முதியவரிடம் சைக்கிளை இங்கே விடக்கூடாது என்று கூறி அதற்கான இடத்தை காட்டினர். அப்போது தான் அந்த 58 வயது முதியவர் சொன்னார். எனது மனைவி கேன்சர் நோயால் அவதிப்படுகிறார். கடந்த மாத சிகிச்சைக்கு வந்தபோது இன்றைய தேதிக்கு பரிசோதனை செய்ய வரச்சொன்னார்கள். எனக்கு சொந்த ஊர் கும்பகோணம். பேருந்து போக்குவரத்து எதுவும் இல்லை.

வாடகை காரிலோ ஆம்புலன்ஸிலோ வர கையில் பணம் இல்லை. அதனால் மனைவி மஞ்சுளாவை சைக்கிளில் அமர வைத்து கொண்டு கும்பகோணத்தில் இருந்து 140 கி.மீட்டர் தூரம் மிதித்து வந்தது களைப்பாக உள்ளது. சிறிது ஓய்வுக்கு பின் சைக்கிளை பார்க்கிங்கில் போடுகின்றேன் என மூச்சு வாங்க முதியவர் அறிவழகன் சொல்ல அதிர்ந்து போனார்கள் ஜிப்மர் மருத்துவமனை பாதுகாவலர்கள். இந்த விவகாரத்தை ஜிப்மர் நிர்வாகத்திற்கு பாதுகாவலர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவர்களுக்கு தேவையான சிகிச்சையை முன்னுரிமை அடிப்படையில் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மஞ்சுளாவை கேன்சர் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு தற்போது எடுக்க வேண்டிய மருந்துகளையும் கொடுத்தும் அனுப்பினர். மனைவிக்கு சிகிச்சை கிடைத்த மகிழ்ச்சியில் 140 கி.மீட்டர் தூரம் சைக்கிளை மிதித்து வந்த களைப்பு நீங்கி மீண்டும் 140 கி.மீ தூரம் செல்ல உற்சாகத்துடன் வெளியே வந்து சைக்கிளை பார்த்தார் அறிவழகன்.

ALSO READ  புதுச்சேரியின் 15 வது முதலமைச்சரானார் என்.ரங்கசாமி !

ஆனால் சைக்கிள் காணவில்லை. அருகில் இருந்த பாதுகாவலர்களிடம் கேட்டார். அதற்கு பாதுகாவலர்கள் உங்களது சைக்கிள் இந்த வாகனத்தில் உள்ளது. இதில் ஏறி உட்காருங்கள். உங்களது சொந்த ஊருக்கே கொண்டு சென்று விட்டு விட்டு வருகின்றோம் என்று கூறினர். இதையடுத்து மட்டற்ற மகிழ்ச்சியில் தனது மனைவியின் முகத்தை பார்த்து சிரிப்போடு ஏறி அமர்ந்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டார் அறிவழகன். கொரோனா கற்றுத்தரும் பல்வேறு பாடத்தில் இந்த பாசப்பறவைகளின் போராட்டமும் வெளிப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் !

News Editor

குரூப் 1 தேர்வுக்கு ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பம்!

Admin

முடிந்தால் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டுங்கள்; கே.என் நேருக்கு பதிலளித்த தேர்தல் அலுவலர் !

News Editor