தமிழகம்

பயந்துள்ள குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்; நடிகை குஷ்பூ !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள கே.கே.நகரிலுள்ள  பி.எஸ்.பி.பி பள்ளியில் மாணவிகளிடம்  பொருளியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில்  பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ ஆசிரியரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சென்னையில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் கொடுமைகளைப் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் உதவாது. உடனடியாக விசாரணை நடத்தி, குற்றம் செய்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் மனதில் பயத்தோடு பள்ளிக்குச் செல்ல முடியாது.

ALSO READ  கே.வி.ஆனந்த் நேற்று வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்; நடிகர் சிம்பு !

அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது கடுமையான குற்றம். இதில் அரசியலையோ, சாதியையோ கொண்டுவரக் கூடாது. குற்றவாளியைக் கடுமையாக தண்டிக்க வேண்டும். பயந்துள்ள குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைப்பு

News Editor

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு !

News Editor

ஹேக்கர்கள் கைவரிசை- குஷ்புவின் கணக்கு முடக்கம்..!

naveen santhakumar