தமிழகம்

லெபனான் போன்று சென்னை துறைமுகத்தில் 5 ஆண்டுகளாக உள்ள அமோனியம் நைட்ரேட்…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

நேற்று முன்தினம் மாலை லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் 2700 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் முறையான பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் தான் வெடித்தது என்று சர்வதேச அளவில் செய்தி வெளியான இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு காவல்துறையால் சென்னையில் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் கைப்பற்றப்பட்டது. 

இந்த அம்மோனியம் நைட்ரேட் தற்போது சென்னை துறைமுகத்திலும் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட், 37 கண்டெய்னரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

கரூரை சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு கொரியாவில் இருந்து 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் இறக்குமதி செய்திருக்கிறது. ஆனால் அதற்கு உரிய அனுமதி பெறாத காரணத்தினால் அதனை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

ALSO READ  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைப்பு

கடந்த 5 ஆண்டுகளாக இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கை என்பது அந்த நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த அமோனியம் நைட்ரேட் எதற்காக வாங்கப்பட்டது என்பது தொடர்பாக கரூரை சேர்ந்த தனியார் நிறுவனம் குறித்து முறையான பதிலளிக்காத காரணத்தினால் அவர்களது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. 

பொதுவாக நீண்ட காலமாக தன் கணக்கில் அமோனியம் நைட்ரேட் ஓரிடத்தில் வைக்கப்பட்டால் ஏற்படும் அழுத்தம் மற்றும் சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் காற்றிலுள்ள ஆகியவற்றின் மூலமாக அமோனியம் நைட்ரேட் வெடிக்கும் தன்மை கொண்டது ஏனெனில் இந்த அமோனியம் நைட்ரேட் காலம் காலமாக மருந்தாக பயன்படுத்தப் பட்டு வருகிறது அதே வேளையில் இந்த அம்மோனியம் நைட்ரேட் தாவரங்களுக்கு நல்ல தழைச் சத்தாகவும் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் லெபனான் வெடிவிபத்து ஏற்பட்டது போல சென்னையிலும் நடந்துவிடுமோ என்ற அச்சம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே விபத்து நடப்பதற்கு முன்,  சென்னையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட்டை தகுந்த பாதுகாப்பான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ALSO READ  பெய்ரூட்டில் பெருவெடிப்பு நடைபெற காரணமான அம்மோனியம் நைட்ரேட் எங்கிருந்து வந்தது???... 

இதேபோல பாமக தலைவர் ராமதாஸ் சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அமோனியம் நைட்ரேட்டை உரிய பாதுகாப்பான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வலுவடையும் காற்றழுத்தம் – தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

naveen santhakumar

பள்ளிகள் திறப்பு; முதல் நாளே 92 % மாணவர்கள் வருகை!

News Editor

பாலமேடு ஜல்லிக்கட்டில் நடந்த கொடூரம்… பவுனை அலேக்காக தூக்கிய போலீஸ்!

naveen santhakumar