செங்கல்பட்டு:-
செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே ஊர்ப்பக்கம் அய்யஞ்சேரியை சேர்ந்த மாணவி அனுசுயா. இவர் நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது 40 சதவிகித தீக்காயத்துடன் மாணவி அனுசுயா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது, இதன்படி நேற்று கவுன்சிலிங்கை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பொதுவாக மாணவர்களின் கல்வி, எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் அரசியல்வாதிகள் செய்யும் மோசமான அரசியலாலும், பெற்றோரின் தேவையற்ற அழுத்தத்தாலும் அவர்கள் இது போன்ற விபரீத முடிவை எடுக்கிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.