தமிழகம்

சூரசம்ஹாரம் திருச்செந்தூர் முருகன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கந்த சஷ்டி விரதத்தின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் - சூரசம்ஹாரம் நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை :  கோயில் நிர்வாகம் | Devotees not allowed in Thiruparankundram Surasamaharam  event, Temple administration ...

முருக பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. கந்த சஷ்டியின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெறும்.

இதனை காண, பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுவர். தற்போது கொரோனா தொற்று காரணமாக திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அனுமதி:

சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் 3 பக்கமும் தடுப்புகள் அமைக்கப்படுகிறது. கடற்கரை வழியாக பக்தர்கள் வராதபடி நாழிக்கிணற்றில் இருந்து கடல்நீர் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் இணைத்தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ALSO READ  சரக்கு கிடைத்த சந்தோஷத்தில் பாட்டி செய்த காரியம்...

பொதுவாக ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். முருகப்பெருமான் சினம் தணிந்து வள்ளியை திருமணம் செய்ததால் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தர்கள்

https://www.youtube.com/channel/UC6kg5EbBPixNm3r2-LZkAxw

https://www.facebook.com/Arulmigu-Dhandayuthapani-Swamy-Temple-Palani-111481050544508

http://www.palanimurugan.hrce.tn.gov.in

ஆகிய தளங்களில் நேரலை ஒளிபரப்பு மூலம் தரிசித்து அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியினை நேரலையில் கண்டு இறையருள் பெறுமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

TNPSC மோசடி…..மேலும் 20 பேர் கைது….

naveen santhakumar

இனி நேரடி செமஸ்டர் தேர்வுகள் – அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

naveen santhakumar

கட்டுப்பாடுகள் தீவிரமடைகிறதா?…. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

naveen santhakumar