தமிழகம்

மழை,வெள்ளம் – ரூ.2,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு பரிசீலனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2000 ரூபாய் நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil Nadu distribution of corona relief amount rs 2000 for ration card  holders starts today know how and where to get | தமிழகத்தில் குடும்ப  அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரூ.2000 கொரோனா நிவாரண ...

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

சென்னை மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால், பல வீடுகளில் தண்ணீர் புகுந்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  எஸ்சி, எஸ்டி மாணவர்கள் உதவித்தொகை - 8 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை போல மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்து விடுமோ என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 2,000 ரூபாய் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

ALSO READ  தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலம்; ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பின் தேசிய இயக்குனர் கண்ணன் அறிவிப்பு !

நிவாரணத்தை, ரேஷன் கார்டு அடிப்படையில், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, 2,000 ரூபாய் ரொக்கமாக வழங்கலாமா அல்லது ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி ரத்து; பெரும் சோகத்தில் மதுபிரியர்கள் !

News Editor

திமுக ஆட்சி குறித்து ஆறு மாதத்திற்கு பின்பு தான் பேச முடியும் – அண்ணாமலை

News Editor

ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்காக கழிவறையை சுத்தம் செய்யும் மனிதர்….

naveen santhakumar