தமிழகம்

இனி நேரடி செமஸ்டர் தேர்வுகள் – அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

இனி செமஸ்டர் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் நேரடி எழுத்து தேர்வாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

BREAKING: பிப்.8 முதல் அனைத்து கல்லூரிகளும் தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம்  அறிவிப்பு !!

கொரோனோ பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்றன. அதேபோல, கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.

ALSO READ  கல்லூரிகளில் சேர ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26 வரை விண்ணப்பிக்கலாம்- அமைச்சர் பொன்முடி பேட்டி

இந்நிலையில், தற்போது கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுவதால், இனிமேல் செமஸ்டர் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் நேரடியாக எழுத்து தேர்வாக நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

அதன்படி இறுதியாண்டு, தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், இன்டெர்னல், ப்ராக்டிகல் உள்ளிட்ட தேர்வுகள் இனி நேரடியாக நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி..!

naveen santhakumar

வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது…….

naveen santhakumar

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!

naveen santhakumar