தமிழகம்

வெள்ளத்தால் மக்கள் அவதி – மின் கட்டணம் கட்ட அவகாசம் தேவை – ஓ.பி.எஸ் ? – அமைச்சர் விளக்கம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டும் என்று மக்களிடம் எந்த கருத்தும் எழவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

செந்தில் பாலாஜி

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக பெரும்பாலான தெருக்களில்‌ மழைநீர்‌ தேங்கி, அங்குள்ள வீடுகளில்‌ மழைநீர்‌ புகுந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

ஏழை, எளிய மக்கள்‌ அவதிப்பட்டுக்‌ கொண்டிருக்கின்றனர். சாலைகளில்‌ நீர்‌ தேங்கி இருப்பதன்‌ காரணமாக அவர்களால்‌ வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை தொடர்கிறது. நாளை வரை மழையின் தீவிரம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ALSO READ  பொங்கல் பண்டிகை: ஆளுநர்,முதலமைச்சர் வாழ்த்து

இந்நிலையில் இந்த மாதம்‌ கட்ட வேண்டிய மின்‌ கட்டணத்தை செலுத்த கூடுதல்‌ அவகாசம்‌ வழங்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், விரைந்து சரிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Dharma yuddh' to continue until Amma's rule is re-established, says  outgoing CM OPS | National News – India TV

இதுதொடர்பாக கூறிய மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,

ALSO READ  உயிரைக் காத்த பெண் காவல் ஆய்வாளருக்கு சல்யூட் - கமல்ஹாசன்

ஓ.பன்னீர் செல்வம் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என கூறியது அவரின் கோரிக்கை. ஆனால் இதுவரை மக்கள் யாரும் இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. எனினும், தமிழக முதலமைச்சரிடம் இதுகுறித்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழைப்பொழிவு அதிகம் இருந்தாலும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மின் தடை ஏற்படாது. தண்ணீர் தேங்கினால் மட்டுமே மின் தடை செய்யப்படும் என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாணவர்களுக்கு கொரோனா – 3 நாட்களுக்கு பள்ளி விடுமுறை!

News Editor

கொரோனா 3-வது அலை; வந்துவிட்டது 4.2 வைரஸ் – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

naveen santhakumar

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு; தமிழக முதல்வர் பரிசீலனை !

News Editor