தமிழகம்

தமிழகத்தின் 26-வது ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

RN Ravi sworn in as Nagaland governor

தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.

அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து புதிய ஆளுநரின் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி புல்வெளி அரங்கில் நடைபெற்றது.

ALSO READ  தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு :

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றார்கள்.

Tamil Nadu Governor-designate arrives in Chennai, to be sworn in on  September 18 - The Hindu

முன்னதாக, புதிய ஆளுநரான ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் வரவேற்றனர். விமான நிலைய வளாகத்திலேயே ஆளுநருடன் முதல்வர் சிறிது நேரம் உரையாடினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் பண்டிகை கால விற்பனைக்கு திட்டம்

News Editor

நீட் தேர்வு: மேலும் ஒரு மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை

News Editor

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Shanthi