தமிழகம்

டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் – ரஜினிகாந்த்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில் கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

முதல் இரண்டு நாட்கள் கடைகள் திறக்கப்பட்டு இருந்தபொழுது சரக்கு கிடைத்தால் போதும் என்ற அளவிற்கு டாஸ்மாக்குகளில் கூட்டம் அலைமோதியது. 

இந்தநிலையில்,  மது விற்பனையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அமல் படுத்தாததால், ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைளை திறப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தேவைப்பட்டால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு, வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் டோர் டெலிவரி முறையை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 2 நாள் விற்பனைக்கு பிறகு மதுக்கடைகளை தமிழக அரசு இழுத்து மூடியது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிப கழகம்)

ALSO READ  தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு....

தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என பதிவிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கனிமொழிக்கு எம்.பிக்கு கொரோனா தொற்று!

Shanthi

குற்றவாளிக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய தேனி நீதிமன்றம்..! 

News Editor

அட்டகாசமான ரூல்ஸ்….இன்று முதல் அமலுக்கு வருகிறது…..மக்களே உஷார்…..

naveen santhakumar