தமிழகம்

புதிய நேர அட்டவணை வெளியீடு- ரயில்களின் நேரம் மாற்றம்- தெற்கு ரயில்வே…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

பல்வேறு சிறப்பு ரயில்களின் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Southern Railway becomes unmanned level crossing free zone | Zee Business

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது:-

இதன்படி, எழும்பூர்-ராமேசுவரம் தினசரி சிறப்பு ரயில் (02205) அதிகாலை 4.20 மணிக்கு ராமேசுவரத்தை வந்தடையும்.

கொல்லம்-எழும்பூர் தினசரி சிறப்பு ரயில் (06724) கோவில்பட்டிக்கு இரவு 8.53 மணிக்கும், சாத்தூருக்கு இரவு 9.13 மணிக்கும், எழும்பூர்-தூத்துக்குடி தினசரி சிறப்புரயில் (02693) தூத்துக்குடி ரயில் நிலையத்தை காலை 6.40 மணிக்கு வந்தடையும்.

Southern Railway Apprentice Recruitment 2021: Apply for 3322 posts, details  here - Hindustan Times

எழும்பூர்- செங்கோட்டை சிறப்பு ரயில் (02661) காலை 8.25 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும். திருநெல்வேலி-பாலக்காடு தினசரி சிறப்பு ரயில் (06791), திருப்பதி- ராமேசுவரம் வாரம் 3 முறை சிறப்பு ரயில் (06779) உள்பட 13 சிறப்பு ரெயில்களில் இடைப்பட்ட சில ரயில் நிலையங்கள், புறப்பாடு அல்லது வருகை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ALSO READ  தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - உங்க ஊர் லிஸ்டுல இருக்கா?

பெரும்பாலான ரயில்களில் சிறிய அளவில் மட்டுமே நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி-மைசூர் இடையே தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06235) தினசரி மாலை 4.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும். சாத்தூர் ரயில் நிலையத்திற்கு மாலை 6.03 மணிக்கு வரும்.

ALSO READ  பொள்ளாச்சி வழக்கு; அதிமுகவை சேர்ந்த அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கம் !

ஜூன் 18-ந் தேதி முதல் ஒகா-தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில் (09568) தூத்துக்குடி நிலையத்தை அதிகாலை 4.40 மணிக்கு வந்தடையும். பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றை கருத்தை கொண்டு ரயில்களின் நேரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறாக, புறப்பாடு, வருகை மற்றும் இடையில் வரும் ரயில் நிலையங்களிலும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முடிந்தால் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டுங்கள்; கே.என் நேருக்கு பதிலளித்த தேர்தல் அலுவலர் !

News Editor

சசிகலா இன்று விடுதலை ; கவலையில் அதிமுக தலைவர்கள் ! 

News Editor

நடிகர் கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி?

Shanthi