பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மற்றும் பைக் பந்தயங்கில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புளியந்தோப்பு காவல்துறை துணை ஆணையர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாத்தையொட்டி மெரினா கடற்கரையில் முழு வீச்சில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் சுய ஒழுக்கங்களை கடைபிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் இரவு 1 மணிக்கு மெரினாவில் கூடியிருக்க அனுமதியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிய ஆம்புலன்ஸ் வசதிகள் ,உதவி தேவைப்பட்டாலும் பொதுமக்கள் உடனடியாக 100 அல்லது காவலன் செயலி மூலம் தகவல் தெரிவிக்கலாம் எனவும் ஆங்காங்கே பாதுகாப்பில் போலீசாரை அணுக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.