தமிழகம்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021-22- சிறப்பம்சங்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

highlights-of-agriculture-budget

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவற்றில் இடம்பெற்றுள்ள முக்கியம் அம்சங்கள் இதோ.

பட்ஜெட்டில் வேளாண்மை, சார்புத்துறைகளுக்கு ரூ.34,330.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை பகுதியில் மிளகிற்கான பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.

ஒட்டன்சத்திரம், பன்ரூட்டி ஆகிய இரண்டு இடங்களில் 10 கோடி செலவில் குளிப்பாதன கிடங்குகள் மாநில அரசு நிதியில் இருந்து அமைக்கப்படும்

50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து புதுப்பொலிவுடன் செயல்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசு நிதியில் அமைக்கப்படும்

மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கப்படும்

திருவள்ளூர் மாவட்டத்தில் கீரை, மிளகாய், கடலூர் மாவட்டத்தில் முந்திரி, பலா, நாமக்கல் மாவட்டத்தில் மிளகு, வெங்காயம், தென்காசி மாவட்டத்தில் எலும்பிச்சை, நெல்லி போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து விதை முதல் சந்தைப்படுத்தல் வரை அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.

ALSO READ  3வது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி - அமெரிக்க அரசு அறிவிப்பு

இத்திட்டம் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்

For the first time in the history of the Tamil Nadu Assembly, the  agriculture budget was tabled || தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக வேளாண்  பட்ஜெட் தாக்கல்

காய்கறி பயிரிடவும், 638 எக்டர் பரப்பில் பந்தல் அமைத்து கொடி வகை காய்கறிகளை பயிரிடவும் அனைத்து மாவட்டங்களிலும் 1000 எக்டர் பரப்பில் கீரை சாகுபடி மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மானியம் வழங்கப்படும்..இந்த திட்டம் 95 கோடி ரூபாய் செலவில் மாநில ஒன்றிய அரசு நிதியுடன் செயல்படுத்தப்படும்

கரும்பு விவசாயிகளின் கோரிக்கையினை ” சிறப்பு ஊக்கத்தொகையாக ” டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாகக் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் கரும்பு விலையாக டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் பெறுவார்கள்.

ALSO READ  கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ் போடுங்க ரூ.1,000 பரிசு அள்ளுங்க !

தமிழகத்தில் நிகர சாகுபடி பரப்பான 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை

கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்

தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறுவது கட்டாயம். பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும்

30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம். 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள்

ரூ.6 கோடியில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை, திருச்சி, வேலூர், கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 10 புதிய உழவர் சந்தைகள்

கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரசி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை
கிருஷ்ணகிரியில் ரூ.10 கோடியில் புதிதாக தோட்டக்கலைக்கல்லூரி அமைக்கப்படும்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு துறை சோதனை…!

naveen santhakumar

என்னது????இவர பார்த்தா……முதல்வர் ச்சூச்சூ..போவாரா?????

naveen santhakumar

27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி…!

News Editor