தமிழகம்

கதிகலங்கும் 35 லட்சம் பேர்… வெளியானது தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களின் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியான நகைக்கடன் தள்ளுபடி குறித்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவித்திருந்தார். தற்போது நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் நகைக் கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தள்ளுபடி பெற தகுதி அற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வசூலிக்க தடை- முதல்வர் பழனிசாமி....

இதுகுறித்து கூட்டுறவு சங்க பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

அ) ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின்படி இடம்பெற்றுள்ள அவர்தம் குடும்பத்தினர்

ஆ) நகைக் கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள்

இ) 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக் கடன் பெற்ற குடும்பத்தினர்

ஈ) 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக் கடன் பெற்ற நபர்

உ) கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்

ஊ) கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்

ALSO READ  தமிழக பட்ஜெட் ஆலோசனை: எதிர்பார்ப்பில் மக்கள் ?

எ) அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரினர்

ஏ). குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்

ஐ) ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்

ஒ) எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினர்

ஓ) ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக் கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமக்கும் கூடுதலாக பெற்ற AAY குடும்ப அட்டைதாரர்கள். ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது கடும் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் வழக்கு…உயர் நீதிமன்றம் உத்தரவு!

naveen santhakumar

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு துறை சோதனை…!

naveen santhakumar

முடிவுக்கு வந்த பேரறிவாளன் சிறை வாசம்; உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Shanthi