தமிழகம்

வரிசையில் நிற்க வேண்டாம்… ஜன.1 முதல் வருகிறது அதிரடி மாற்றம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சார் பதிவாளர் அலுவலகங்களில் மூத்த குடிமக்கள் வரிசை எண்ணுக்காக காத்திருக்காமல் சார் பதிவாளர் அலுவலகம் வந்தவுடன் உடனடியாக பதிவு செய்யப்படும் என வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஸ்டார் 2.0 மென்பொருளில் தற்போது எவ்வித பாகுபாடும் இன்றி, முன்பதிவு செய்த வரிசையில் பத்திரப் பதிவு நடந்து வருகிறது. இவ்வாறு வரிசைக் கிரமமாக பதிவு செய்யப்படும்போது, சார் பதிவாளர் அலுவலகங்களில் மூத்த குடிமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அவர்களது நலனை கருத்தில் கொண்டு, இனிமேல் பத்திரம் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவரில் ஒருவர் 70 வயதை கடந்தவராக இருந்தால், அவர்கள் தங்கள் வரிசை எண்ணுக்காக காத்திருக்காமல் அலுவலகம் வந்ததும் உடனடியாக பதிவு செய்யும் வகையில், மென்பொருளில் உரிய மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பு 2022 ஜன.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்... மக்கள் எதிர்ப்பால் யாரும் இன்றி அவசர அவசரமாக புதைக்கப்பட்ட அவலம்...!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்!

News Editor

தாமிரபரணியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

naveen santhakumar

கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி. தமிழக அரசு அரசாணை வெளியீடு.

Shanthi