தமிழகம்

தாமிரபரணியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்கவோ, கரை பகுதிக்குச் சென்று பார்வையிடவும் செல்பி எடுக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணியில் 3,800 கனஅடி தண்ணீர்  திறப்பு குறுக்குத்துறை முருகன் கோயிலை சூழ்ந்த வெள்ளம் | Thamirabarani ...

கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஏரி, குளங்களும் நிரம்பியுள்ளன.

குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால்ள ஆற்றில் உள்ள கல் மண்டபங்கள், நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளை சூழ்ந்து செல்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கரை பகுதிக்குச் சென்று பார்வையிடவும் செல்பி எடுக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ALSO READ  திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்!

இதேபோல், மதுரை வைகை ஆற்றில் 13 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

வைகையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்..! தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை..! |  flood in madurai vaigai river

மூன்று தரை பாலங்கள் மூழ்கியுள்ள நிலையில், வைகை கரையோரமுள்ள அணுகு சாலை மற்றும் மீனாட்சி கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

ALSO READ  வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்...!

இதனால் கோரிப்பாளையம், செல்லூர், சிம்மக்கல், நெல்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தைகளுக்கான 5 லட்சம் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார் :

Shobika

சிறுமியின் வயிற்றில் அரை கிலோ முடி அதிர்ந்து போன மருத்துவர்கள்

Admin

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோன தொற்று !

News Editor