தமிழகம்

ஆகஸ்டு இறுதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு??? 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் கூடுதல் தளர்வுகளுடன் ஆக்ஸ்ட் மாதம் இறுதி வரை ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி இதில் நாடெங்கும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் குறையாத காரணத்தால் ஊரடங்குகள் தொடர்ந்து நீடிக்கப்பட்டது. 

ALSO READ  லடாக் வாகன விபத்தில் இறந்த ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை-முதல்வர்

இதற்கிடையில் கடந்த மாதம் தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக சில தளர்வுகளுடன் வரும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவித்தது. இந்த ஊரடங்கு முடிவடைய 2 நாட்களே உள்ள நிலையில் ஊரடங்கு குறித்து முதல்வர் அப்பாடி பழனிச்சாமி நிபுணர்களுடன் ஜூலை 30ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஜூலை 31ம் தேதிக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் இறுதி வரை ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் திறப்பு உள்ளிட்ட சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என்றும் பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, மெட்ரோ போக்குவரத்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கு தொடர்ந்து தடைவிதிக்கப்படும் என்று தெரிகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவி…

naveen santhakumar

தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை

Admin

சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்ட நபரின் தலை பீர் பாட்டிலால் உடைப்பு

Admin