தமிழகம்

பெண் தொழிலாளர்கள் 12 மணி நேர போராட்டம் வாபஸ்!

Women Protest
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் 12 மணி நேரத்திற்கு பிறகு வாபஸ் பெறப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தமல்லியில் அமைந்துள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். கடந்த 15ம் தேதி அங்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கபட்டு திருவள்ளூர், நேமம், பூந்தமல்லியில் உள்ள அரசு சுற்றியுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் குறித்த நிலையை சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகம் தெரிவிக்காமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விடுதியில் இருந்த பெண் ஊழியர்கள் அனைவரும் வெளியில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சுமார் 16மணி நேரத்திற்கும் போராட்டம் நடைபெற்றதால் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்மித்தது.

ALSO READ  ‘தமிழ்ச்சாலை’ செயலியைப் பயன்படுத்துங்கள்: அமைச்சா் க.பாண்டியராஜன்...

போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் போராட்டம் நடத்திய பெண் தொழிலாளர்களிடம் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் அவர்களின் கோரிக்கை அரசு ஏற்றுகொள்ளவதாகவும் உறுதி அளித்தனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தியதையடுத்து 16 மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யூ-டியூப் பார்த்து பிரசவம்… குழந்தை, தாய்க்கு நேர்ந்த பரிதாப நிலை!

naveen santhakumar

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… கார், பைக், கறவை மாடு வென்ற வீரர்கள்!

naveen santhakumar

எச்சரிக்கையை மீறி போராட்டம்; 150 மாணவர்கள் கைது!

naveen santhakumar