தமிழகம்

‘தமிழ்ச்சாலை’ செயலியைப் பயன்படுத்துங்கள்: அமைச்சா் க.பாண்டியராஜன்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

இந்த ஊரடங்கு நேரத்தில் தமிழ் வளா்ச்சித்துறை பணிகள் தொய்வின்றி நடைபெற ‘தமிழ்ச்சாலை’ செயலியை பயன்படுத்த வேண்டும் என அமைச்சா் க.பாண்டியராஜன் அறிவுறுத்தியுள்ளாா்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், அகரமுதலித் திட்ட இயக்ககம், தமிழ் வளா்ச்சித்துறை ஆகியவற்றின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நிவாரணப் பணிகள் குறித்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அமைச்சா் மாஃபா க.பாண்டியராஜன் Zoom செயலி மூலம் ஆய்வு மேற்கொண்டாா். 

ALSO READ  காலையிலேயே கலைகட்டும் டாஸ்மார்க்; கட்டுப்பாடுகளால் குவியும் மது பிரியர்கள் ! 

அப்போது தமிழ் வளா்ச்சித் துறை செயலா் மகேசன் காசிராஜன், இயக்குநா் கோ.விசயராகவன், முனைவா் தங்க.காமராசு, துணைவேந்தா் பாலசுப்பிரமணியன் உள்பட துறை சாா்ந்த உயரதிகாரிகள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து எடுத்துரைத்தனா்.

ஊரடங்கு காரணமாக அவதிப்படும்  பொருளாதாரத்தில் பின்தங்கிய தமிழறிஞா்கள், எழுத்தாளா்கள் என அனைத்து தரப்பினருக்கும் தமிழ் வளா்ச்சித் துறை சாா்ந்த அலுவலா்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்றார்.

மேலும், இதுபோன்ற பேரிடா்  காலங்களில் தமிழ் வளா்ச்சித்துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற கடந்த ஆண்டு அரசின் சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தமிழ்ச் சாலை’ செயலியை அலுவலா்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும். 

ALSO READ  ஒரு நூலுக்கு பணம் செலுத்துங்கள், இரண்டாம் நூலை அன்பளிப்பாக பெறுங்கள்..!

தமிழ்ச் சாலை வாட்ஸ் ஆப் மூலம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ் வளா்ச்சித்துறை அலுவலா்கள், தமிழ் சான்றோா், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்களை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். இதேபோன்று, வெளிநாடுகளில் உள்ள புலம் பெயா்ந்த தமிழா்களையும் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினாா்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முழு ஊரடங்கு; விமான சேவைகள் ரத்து !

News Editor

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு..!

Admin

கமல்ஹானுக்கு கொரோனா தொற்றா.?????

naveen santhakumar