தமிழகம்

சபாஷ் சென்னை மாநகராட்சி… கழிவு மேலாண்மையில் புதிய முயற்சி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் சராசரியாக ஒரு நாளைக்கு டன் கணக்கில் குப்பைகள் குவிகிறது சென்னையில் மிகப்பெரும் குப்பை மேடாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி திகழ்கிறது.

இங்கு ஒரு நாளைக்கு சராசரியாக 50 மெட்ரிக் டன் அளவிற்கு குப்பை கொட்டப்படுகிறது. இதற்க்கு அடுத்ததாக மணலியில் சராசரியாக ஒரு நாள் ஒன்றுக்கு 10 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பைகள் கொட்டப்படுகிறது.

கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குகள் மூலமாக மண்வளம், நிலத்தடி நீர், காற்று மாசுபடுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது, அடிக்கடி இந்த குப்பைகளை எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை சொல்வதால் மக்கள் பெரும் தொந்தரவுக்கு ஆளாகின்றார்கள்.

கழிவு மேலாண்மையில் சென்னை மாநகராட்சி புதிய முயற்சியை துவங்கி உள்ளது. இதுநாள்வரையில் கழிவு மேலாண்மையில் சென்னை மாநகராட்சி குறிப்பிடத்தக்க எந்த ஒரு பணியும் மேற்கொண்டது இல்லை என்று பரவலாக குற்றச்சாட்டுகள் நிலவிவந்தது.

இந்நிலையில் கழிவு மேலாண்மையில் புதிய புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள இருக்கிறது.

ALSO READ  பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாட காவல்துறையோடு இணைந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை

இது குறித்து கூறிய சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ்:-

கழிவுகளைக் கையாள்வதும் மிகப் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கழிவு மேலாண்மையில் புதிய முயற்சியாக எரியூட்டும் (Incenerators) அரங்குகள் அமைக்கப்பட உள்ளோம். அந்த அரங்குகள் மூலமாக சராசரியாக பத்து மில்லியன் டன் குப்பைகளை எரிப்பதன் மூலமாக 150 கிலோ கிராம் அளவிற்கு சாம்பல் கிடைக்கும். அந்த சாம்பல் கொண்டு டைல்ஸ் மற்றும் செங்கற்கள் செய்யப்படும்.

தற்போது சோதனை ரீதியாக மணலி குப்பைக்கிடங்கில் இந்த முயற்சி செயல்படுத்தப்படுகிறது, வரும் மே மாதத்திற்குள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குகளில் இந்த எரியூட்டும் அரங்குகள் அமைக்கப்பட்டு டைல்ஸ் மற்றும் செங்கற்கள் தயாரிக்கும் பணி துவங்கப்பட உள்ளது.

ALSO READ  முகக்கவசம் அணியும் முறை; வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின் !

தற்போது இவை வணிக ரீதியாக தயாரிக்கப்படவில்லை. நடைமேடைகளை அழகுபடுத்தும் விதமாக இந்த செங்கற்கள் மற்றும் டைல்ஸ் பயன்படுத்தப்பட இருக்கிறோம். மேலும் வண்ண தெளிப்பு எந்திரங்கள் மூலம் கலர் டைல்ஸ் மற்றும் கலர் செங்கற்கள் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவற்றிற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து அடுத்ததாக சந்தைபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் நிலத்தில் பரப்புதல் (Land Filling) முறையின் மூலம் குப்பை மேலாண்மை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறக்கப்படலாம்;  பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பேட்டி..!

News Editor

அதிர்ச்சி……அமைச்சர் துரைக்கண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்….

naveen santhakumar

சலூன் கடைகள் திறக்க அனுமதி… 

naveen santhakumar