தொழில்நுட்பம்

‘Mendelevium-244’ என்று புதிய ஐசோடோப் அறிமுகம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மனிதனால் உருவாக்கப்பட்ட தனிமமான மெண்டலீவியம் தனிமத்தின் புதிய வடிவத்தை லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்தை (Lawrence Berkeley National Laboratory (Berkeley Lab)) சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஜெனிஃபர் போர் (Jennifer Pore) பெர்க்லி ஆய்வக விஞ்ஞானி.

இந்த ஐசோடோப்-க்கு ‘Mendelevium-244’ என்று பெயரிட்டுள்ளனர். இது தனிம வரிசை அட்டவணையில் 101வதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் மெண்டலீவியம் தனிமத்தின் 17வது இலேசான வடிவம் ஆகும்.

ஐசோடோப்புகள் என்பதை ஒத்த அணு எண்ணையும், மாறுபட்ட நிறை எண்ணையும் கொண்டவை. அதாவது ஒரே எண்ணிக்கையிலான புரோட்டான்களும் மாறுபட்ட எண்ணிக்கையிலான நியூட்ரான்களை கொண்டவை. நியூட்ரான்கள் மின்சுமையற்ற துகள்கள் ஆகும்.

ALSO READ  ATM கார்டு தொலைந்து விட்டதா?????இனி சுலபமாக உங்கள் மொபைலில் இருந்தே அதனை சரிசெய்யலாம்….

பெர்க்லி ஆய்வகத்தில் 1955 ஆம் ஆண்டு ஆய்வாளர்களால் மெண்டலீவியம் தனிமம் உருவாக்கப்பட்டது.  இதுவரையில் பெர்க்லி ஆய்வகம் மூலமாக 16 தனிமங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

‘Mendelevium-244’ ஐசோடோப்பை பெர்க்லி ஆய்வகத்தில் உள்ள 88 இன்ச் சைக்ளோட்ரான் மூலமாக உருவாக்கியுள்ளனர்.

சைக்ளோட்ரான்கள் மின்னூட்டம் பெற்ற சக்தி வாய்ந்த துகள்களின் பீம்களை இலக்குகளின் மோத செய்வதன் மூலமாக கனமான தனிமங்களின் அணுக்களை உருவாக்குகிறது. சைக்ளோட்ரான் (Cyclotron) எனப்படும் இந்தத் துகள் முடுக்கியை 1930 ஆம் ஆண்டு எர்னஸ்ட் ஓ’ லாரன்ஸ் (Ernest O Lawrence) என்பவரால் உருவாக்கப்பட்டது.

ALSO READ  மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாக கூகுளின் சூப்பர் கண்டுபிடிப்பு:

தற்போது உலகில்  உள்ள ஆய்வகங்களில் அதிகளவு ஐசோடோப்புகளை உருவாக்கிய ஆய்வகம் என்ற பெருமையைப் பெர்க்லி ஆய்வகம் பெற்றுள்ளது. இதுவரையில் இந்த ஆய்வகத்தில் 640 ஐசோடோப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 17 மெண்டலீவியம் ஐசோடோப்புகளின் 12 மெண்டலீவியம்  ஐசோடோப்புகள் இந்த ஆய்வகம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குறைந்த விலையில் இயர்போன் :

Shobika

ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ காம்பேக்ட் மாடலின் புது வேரியண்ட்கள் இந்தியாவில் அறிமுகம் :

Shobika

சாம்சங் 5G ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியீடு :

Shobika