தொழில்நுட்பம்

மால்வேர் அலர்ட் – பிளே ஸ்டோரிலிருந்து ஏழு செயலிகளை நீக்கிய கூகுள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மால்வேர் எச்சரிக்கை காரணமாக பிளே ஸ்டோர் தளத்திலிருந்து ஏழு செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.

Malware alert: 13 infected apps removed from Google Play Store | TechGig

அண்மைய காலமாக இணையத்தில் ஆன்லைன் மூலமாக பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை திருடுவது, மோசடி செய்வது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், காஸ்பர்ஸ்கி நிபுணர் ஒருவர் பிளே ஸ்டோரில் சில அப்ளிகேஷனில் மால்வேர் எனப்படும் தீம்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இதனையடுத்து கூகுள் நிறுவனம் அந்த அப்ளிகேஷன்களை நீக்கியுள்ளது.

ALSO READ  ஹோண்டா நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டரின் விலையுயர்வு :

கூகுள் நீக்கியுள்ள அப்ளிகேஷன்கள் பட்டியலில் QR கோட் ஸ்கேன், எமோஜி ஒன் கீபோர்ட், பேட்டரி சார்ஜிங் அனிமேஷன்கள் பேட்டரி வால்பேப்பர், Dazzling கீபோர்டு, வால்யூம் பூஸ்டர் லவுட் சவுண்ட் ஈக்வலைசர், சூப்பர் ஹீரோ எஃபெக்ட் மற்றும் கிளாசிக் எமோஜி கீபோர்ட் உள்ளிட்டவை உள்ளன.

மேலும், இந்த அப்ளிகேஷன்களை தங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ள பயனர்கள் உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாட்ஸப் புது அப்டேட்: அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்!

naveen santhakumar

அந்நிய மொழிகளில் உரையாடுவதை எளிமையாகியது கூகுள்..

Admin

சாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் விற்பனை அதிரடி நிறுத்தம் :

naveen santhakumar