தொழில்நுட்பம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வேரியண்ட்கள் விரைவில் அறிமுகம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் மற்றும் டிசையர் சி.என்.ஜி. வேரியண்ட்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு மாடல்களிலும் மாருதியின் எஸ்-சி.என்.ஜி. தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. மேலும் இவற்றில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.இந்திய சந்தையில் அதிக சி.என்.ஜி. மாடல்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி இருக்கிறது. இந்நிறுவன மாடல்களில் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் சி.என்.ஜி. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

ALSO READ  2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஹீரோ எலெக்ட்ரிக் பைக்
Maalaimalar News: Tamil News Maruti Suzuki Swift and Dzire CNG India Launch  Soon

இத்துடன் ஈக்கோ சி.என்.ஜி. எம்.பி.வி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.தற்போதைய தகவல்களின்படி ஸ்விப்ட் மற்றும் டிசையர் சி.என்.ஜி. வேரியண்ட்களில் 1.2 லிட்டர் டூயல் ஜெட் வி.வி.டி. என்ஜின் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த என்ஜின் பலத்தரப்பட்ட எரிபொருள்களில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதனால் இவற்றின் செயல்திறன் சற்றே குறைந்து இருக்கும் என தெரிகிறது.

Maruti Swift CNG and Dzire CNG Variants Coming Soon

தற்போதைய பெட்ரோல் என்ஜின் 88 பி.ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறனை வழங்குகிறது. சி.என்.ஜி. வேரியண்ட் இதைவிட 10 சதவீதம் குறைந்த திறன் கொண்டிருக்கும். புதிய சி.என்.ஜி. வேரியண்ட்களின் விலை பெட்ரோல் மாடல்களை விட அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இளைஞரின் உயிரை காப்பாற்றிய பேஸ்புக்…!

News Editor

10 விநாடி வீடியோ அனுப்புங்க : ஜியோவின் பரிசை வெல்லுங்க

Admin

ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் விலையில் மாற்றம் :

Shobika