தொழில்நுட்பம்

எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை நியூசிலாந்தில் தொடங்குகிறது ஓலா நிறுவனம் 

ola electric scooter
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல தனியார் நிறுவனமான ஓலா மக்களின் நெடுந்தூர பயணங்களில் பெருதும் உதவி செய்து வருகிறது. ஷேர் ஆட்டோவை போல பலரும் காரில் பயணம் செய்து அதற்க்கான கட்டணத்தை பகிர்ந்து கொள்ளும் வசதியை மக்களுக்கு வழங்கி வருகிறது ஓலா நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் அடுத்த கட்ட முயற்சியாக நியூசிலாந்தில்  எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

காற்றில் கலந்துள்ள கார்பனை குறைக்கும் வகையில் நியூசிலாந்து அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு முயற்சியாக வருகின்ற 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 64000 எலக்ட்ரிக் வாகனங்களை சாலை பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.அதனை அறிந்துகொண்ட ஓலா நிறுவனம் எலக்ட்ரானிக் இரு சக்கர வாகனங்களை நியூசிலாந்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆம்ஸ்டர்டாமில்  இயங்கிய  எடர்கோ நிறுவனத்தை வாங்கிய ஓலா நிறுவனம் அதன் ஊடாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஓலா நிறுவனம் ஆண்டுக்கு 2 மில்லியன் எலக்ட்ரிக் இருசக்கர வகங்கங்கள் தயாரிக்கும் மிகப்பெரிய ஸ்கூட்டர் தயாரிப்பு தொழிற்சாலைகளை நிறுவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  ஒரே நாளில் 89 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !


உலகத்திற்கே அச்சுறுத்தலாக இருந்து  வரும்  காலநிலை மாற்றம் தான். காற்றில் அதிகரித்து வரும் கார்பன் அளவை குறைப்பதற்கான முயற்சிகளை நியூசிலாந்து அரசு எடுத்துவருகிறது. அதில் எங்கள் பங்கும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஓலா நிறுவனத்தின் சி.இ.ஓ  பிவிஷ் அகர்வால் கூறியுள்ளார்.



Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கதிர்வீச்சு மூலம் புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கருவி : முதல்வர் பழனிசாமி தொடக்கம்

Admin

xiaomi நிறுவனத்தின் மின்சார பைக் அறிமுகம்

Admin

மனித தொடர்புகளை குறைக்க ட்ரோன்களை பயன்படுத்தும் சிங்கப்பூர் அரசு….

naveen santhakumar