தமிழகம் தொழில்நுட்பம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ‘ஜாபி’ ரோபோட்!!!தமிழக நிறுவனம் தயாரிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சி:-

கொரோனா நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான மருந்து, உணவு வழங்கும் பணியில் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கும் கொரோனா தோற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே ரோபோக்களின் உதவியுடன் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளைச் செய்யமுடியும் என்பதனால், இனி ரோபோட்கள் பணியில் ஈடுபடுத்தப்படும் எனச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்சியிலுள்ள புரொபல்லர் டெக்னாலஜிஸ் என்ற டிரோன் மற்றும் ரோபோக்களை வடிவமைத்து உருவாக்கும் தனியார் நிறுவனம், ‘ஜாபி’ (Zafe) என்ற ரோபோவை தயாரித்து அரசுக்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. வாய்ஸ் இன்ட்ராக்டிவ் (VI) தொழில்நுட்பம் மற்றும் மொபைல் ஆப் மூலமாக கன்ட்ரோல் செய்யப்படும் ஜாபி வகை ரோபோக்களின் முன்னோட்டம் கடந்த 29ம் தேதி மாவட்ட ஆட்சியர் சிவராசு முன்னிலையில் நடந்தேறியுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இந்த ரோபோக்கள் தண்ணீர் கொண்டு சென்றன. இவை வெற்றிகரமாகச் செயல்படவே, அரசு மருத்துவமனைகளுக்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் கூறுகையில்:-

ALSO READ  ஜவுளிக்கடையின் புதிய யுக்தி….ரோபோட் மூலம் வாடிக்கையாளர்கள் வரவேற்பு:

கொரோனா தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருந்து, உணவுப் பொருட்களைக் கொண்டு சென்று கொடுப்பதற்கு இவை உதவும். இதனால், மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளின் அருகில் செல்வதைக் கூடிய வரை தவிர்க்கலாம். ஓரிரு நாட்களில் இந்த ரோபோக்கள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

courtesy.

கோவை, கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மெக்கானிக் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வரும் மதன்குமார் என்ற கோவில்பட்டியைச் சேர்ந்த மாணவர்

இந்த ஜாபி என்ற சிறிய வகையிலான இயந்திரத்தை வடிவமைத்து உருவாக்கியுள்ளார். இவர் Internet of things டெக்னாலஜி மூலமா கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கும், மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் பயன்படும் வகையிலான `தானே கொண்டு செல்லும் கருவி’ என்ற இந்த கருவியைத் தான் உருவாகியுள்ளது அவர் கூறியுள்ளார்.

இந்த ஜாபி ரோபோட் இன்டெர்நெட் மூலம் ப்ளிங்க் ஆப் (Blynk App) உதவியுடன் wifi வளையத்திற்குள் இருக்கும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை எளிதாகக் கண்காணிக்க முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள கூடை மூலம் தனிமைப்படுத்தப்பட்டவரின் அறைக்கு அந்த நபருக்குத் தேவையான 3 முதல் 4 கிலோ எடை வரையுள்ள உணவு, மருந்துப் பொருள்கள் அனுப்ப முடியும்.

ALSO READ  கடலூர் ரசாயன ஆலையில் தீ விபத்து; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை !

இந்த ஜாபி ரோபோட் 360 டிகிரியிலும் இயங்கக்கூடியது, பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்க இதில் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ரோபோவை ரூ.1500 செலவில் மதன்குமார் உருவாக்கியுள்ளார். மேலும் இதனை மேம்படுத்த ரூ.18,000 முதல் 20,000 வரை செலவாகும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேபோல், இந்த கருவியைக் கொண்டு விவசாய நிலங்கள், வனத்துறை பகுதிகளில் உள்ள ஆபத்தான விலங்களின் நடமாட்டம், விலங்குகள் பதுங்கியிருக்கும் இடங்கள் குறித்தும் கண்காணிக்க உதவும் என்கிறார் மதன்குமார். இதன் செயல் விளக்கத்தை செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, மாவட்ட எஸ்.பி அருண் பாலகோபாலன் ஆகியோர் பார்வையிட்டனர். செயல் விளக்கத்திற்குப் பிறகு, மதன்குமாரை அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கு நேரத்தில் கஞ்சா விற்பனை செய்த தனியார் நிறுவன உணவு டெலிவரி பாய் கைது. …

naveen santhakumar

ஜன- 9 முதல் 11 வரை தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Admin

சர்ச்சையை ஏற்படுத்தியதா நடிகை ஜோதிகாவின் பேச்சு? அப்படி என்ன‌ பேசினார்?….

naveen santhakumar